கிழக்கில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

0

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகள் இன்று (17) அதிகாலை 6 மணி முதல் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை, ஆலையடிவேம்பு ஆகிய பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அக்கரைப்பற்று – 5, அக்கரைப்பற்ற – 14 மற்றும் நகர் அதிகாரத்திற்குட்பட்ட – 03ம் பகுதி ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அட்டாளச்சேனை பொலிஸ் பிரிவில் பாலமுனை – 01, ஒலுவில் – 02 மற்றும் அட்டாளச்சேனை – 08 ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், ஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவில் ஆலையடிவேம்பு – 8/1, ஆலையடிவேம்பு – 8/3 மற்றும் ஆலையடிவேம்பு – 09 ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.