கிழக்கு மாகாணத்தில் கொரோனா எண்ணிக்கை 300ஐக் கடந்தது

0

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 303ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நேற்று மாத்திரம் அட்டாளைச்சேனையில் 13 பேருக்கும், அக்கரைப்பற்றில் 6 பேருக்கும், ஆலையடிவேம்பில் இருவருக்கும், திருக்கோயிலில் ஒருவருக்கும், கல்முனையில் ஒருவருக்குமாக மொத்தம் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படித்தப்பட்டுள்ளது.

இதன்படி, அம்பாறையில் 12 பேரும், கல்முனையில் 183பேரும், மட்டக்களப்பில் 92 பேரும், திருகோணமலையில் 16 பேருமாக கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 303 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பொது மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்குமாறும், முகக்கவசங்களை அணியுமாறும், குழுக்களாக செயற்படுவதை குறைக்குமாறும், தேவைகளுக்கு மாத்திரம் வெளியில் செல்லுமாறும், சுகாதார துறையால் அறிவிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களை சரியாக கடைப்பிடிக்குமாறும் அவ்வாறு கடைபிடிக்காதவர்களை கைது செய்து தனிமைப்படுத்துவதுடன் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்