கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

0

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3434 ஆக அதிகரித்துள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

திருகோணமலையில் 733 பேரும், மட்டக்களப்பில் 909 பேரும், அம்பாறையில் 321 பேரும், கல்முனையில் 1471 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.