கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது.
கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், வைத்தியர் அழகையா லதாகரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளதாகவும் ஏறாவூரில் ஒருவரும் கோறளைப்பற்று மத்தியில் ஆறு பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேநேரம், கிழக்கு மாகாணத்தில் 9674பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 5091 பேர் பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.