கிழக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் இன்று தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்றில் 68 நபர்களிடம் எடுக்கப்பட்ட பீ .சீ.ஆர் பரிசோதனையில் 13 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அத்துடன் திருக்கோவிலில் ஒருவருமாக மொத்தமாக 14 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் கல்முனை அக்கரைப்பற்று பகுதியில் இதுவரையில் 86 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் இதுவரை 200 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.