குடும்பத்தகராறு காரணமாக மனைவியை அடித்து கொன்ற கணவன்

0

கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டோசன் வீதியில் குடும்பத்தகராறு காரணமான கணவன் தனது மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்.

நேற்று (28) இரவு குறித்த கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடபுடைய 39 வயதுடைய கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.