குணமடைந்து வெளியேறிய நோயாளிக்கு மீண்டும் கொரோனா..!

0

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளாகி கடந்த 17 ஆம் திகதி குணமடைந்து வெளியேறிய ஜா-எல பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நெஞ்சு வலியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நோயாளிக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக ஜா-எல பொது சுகாதார பரிசோதகர் கே.ஏ. அனுர அபேரத்ன கூறியுள்ளார்.

குறித்த 67 வயதான நோயாளி கடந்த மார்ச் 17 அன்று முதன்முதலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஏப்ரல் 17 ஆம் திகதி முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதன் பின்னர் கடந்த 30 ஆம் திகதி மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டபோது அவர் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தார். அதனை தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நோயாளி தற்போது கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.