குணமடைந்த சீனப்பெண் வெளியில் நடமாட முடியாது

0

கொரோனா வைரஸின் தொற்றுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீனப்பெண் குணமடைந்த போதும் குறித்த பெண்ணை வைத்தியசாலையிலிருந்து உடனடியாக விடுவிக்க முடியாது என வைத்தியாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண்ணுக்கு தொற்றியிருந்த கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுவதுமாக பூரண குணமடைந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அவரை வெளியில் அனுப்ப முடியாது என்ற செய்தி சீனப்பெண்ணுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் குறித்த சீனப் பெண்ணின் உடல் நிலை தொடர்பான பல சோதனை முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை என குறிப்பிட்டுள்ளது.