குருணாகல் போதனா வைத்தியசாலையின் திடீர் விபத்து சேவைப் பிரிவு மூடப்பட்டது!

0

குருணாகல் போதனா வைத்தியசாலையின் திடீர் விபத்து சேவைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார்.

திடீர் விபத்து சேவைப் பிரிவில் சிகிச்சைப்பெற வருகை தந்த நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. இதனையடுத்தே வைத்தியசாலையின் குறித்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பிரதி பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நோயாளர், மாரடைப்பு காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டவேளை கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர், குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட குருதி பரிசோதனையில் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் குருணாகலை போதனா வைத்தியசாலையின் திடீர் விபத்து சேவை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.