குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு

0

இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

சமூர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களுக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களும் இந்த பணத்தை பெற முடியும்.

தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.