குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு – அமைச்சரவை அனுமதி

0

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையில் உள்ள சிக்கல்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், அரிசி விலையை குறைப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.