குளத்தில் குளிக்கச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவன் முதலாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பை சேர்ந்த 20 வயதுடைய பிரதீப்குமார் வளர்சிகன் எனவும் குறித்த மாணவன் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி 2019 வர்த்தப்பிரிவு மாணவன் எனவும் (பல்கலைக்கழக புதுமுக மாணவன் 3rd rank) எனவும் அறியமுடிகின்றது

சம்பவ இடத்திற்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.