குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

0

கொரோனா அச்ச நிலைமையை அடுத்து குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவுப் பகுதி தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இவ்வாறு முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவேந்திர சில்வா கூறியுள்ளார்.