குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் வேலைத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வலியுறுத்து!

0

குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் வேலைத் திட்டத்தை காலம் தாழ்த்தாது உடனடியாக செயற்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு குடும்ப நல சுகாதார சேவை அதிகாரிகள் சங்கத்தின் தவிசாளர் தேவிகா கொடிதுவக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவுவதையடுத்து, தடுப்பூசி போடும் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன. எனினும், இதனை மேலும் தாமதித்தால் பாரிய விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்காரணமாக வீடுகளுக்குச் சென்று குழந்தைகளுக்கான தடுப்பூசிகளைப் போடும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.