கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினர் கலையரசன் – வர்த்தமானி வெளியானது!

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் 19 தேசிய பட்டியல் உறுப்பினர்களது பெயர்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (திங்கட்கிழமை) இரவு வெளியிடப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் காமினி லக்ஸ்மன் பீரிஸ், சாகர காரியவசம், அஜிட் நிவிட்கப்ரல், மொஹமட் அலி சப்ரி, ஜயந்த வீரசிங்க, மஞ்சுள விஜயகோன் திஸாநாயக்க, ரஞ்சித் பண்டார, கவிந்த குமாரதுங்க, மொஹமட் முஸம்மில், திஸ்ஸ விதாரண, யாத்தமணி குணவர்தன, சுரேன் ராகவன், சீதா அரேம்பிய பொல, ஜயந்த பெரோனா, மொஹமட் பசில் மார்ஜான் அஸ்மின் ஆகியோர் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக செல்வராசா கஜேந்திரன் தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் ஏற்கென அறிவிக்கப்பட்டதன்படி, தவராசா கலையரசனின் பெயர் தேசிய பட்டியலில் இணைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களது பெயர்கள் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.