தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரை மாற்றுவது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போதும் இதுகுறித்து பேசப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்க பணிகளில் நாங்கள் ஏற்கனவே செய்த முயற்சிகளை அடித்தளமாக வைத்து நாங்கள் முன்னேறலாம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.