கூட்டமைப்பை பிரிக்கும் நோக்கம் இல்லை – செல்வம்

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனித்து செயற்படவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

இது குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள அவர், கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனம் தமது சம்மதம் இன்றி வழங்கபட்டுள்ளது எனது உண்மை ஆனால் அதற்காக கூட்டமைப்பை பிளவுபடுத்த காரணமாக இருக்கப்போவதில்லை என குறிப்பிட்டார்.

தம்மை பகடையாக வைத்து தமிழரசுக் கட்சியின் தலைவரை பிரிக்கலாம் என்றும் கூட்டமைப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பக்கம் செய்வார்கள் என்றும் தவறான எண்ணத்தில் சிலர் இவ்வாறு செய்திகளை பரப்பிவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கம் தமிழர்களின் இருப்பிற்கும் விடிவுக்காகவும் செயற்படும் அதேநேரம் தற்போது போன்றே கூட்டமைப்பில் மேலும் பலமாக பயணிக்கும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.