கொரோனா அச்சம்? மெனிங் சந்தையில் 32 கடைகள் மூடப்பட்டன

0

கொழும்பு, மெனிங் சந்தையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 கடைகள் மூடப்பட்டுள்ளன.

குறித்த சந்தையில் தொழில்புரியும் ஊழியர் ஒருவரின் உறவினர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளைய தினம் மெனிங் சந்தையின் 35 ஊழியர்களிடம் பி.சி.ஆர். சோதனை செய்ய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.