கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி பகுதியில் ஒருவரும் ஓட்டமாவடியில் ஒருவரும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.

ஓட்டமாவடியில் இனங்காணப்பட்டவர் பேலியகொட மீன்சந்தை கொத்தனியுடன் தொடர்புடையவர் எனவும் மாவடிமுன்மாரியை சேர்ந்தவர் கொழும்பில் இருந்து வந்தவர் எனவும் தெரிவித்தார்.

இதேநேரம் குறித்த நபர் கடந்த 27ஆம் திகதி கொழும்பில் இருந்துவந்துள்ளதாகவும் தனியார் பேருந்து ஒன்றில் மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அவர் சுகவீனம் காரணமாக மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற நிலையில் அங்கு அவர் மீது சந்தேகம் கொண்டு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபருடன் பயணித்தவர்கள்,பழகியவர்கள்,குறித்த நபர் சென்ற இடங்களில் பழகியவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.