கொத்து, ஃப்ரைட் ரைஸ், தேநீரை அடுத்து பாணின் விலையும் அதிகரிப்பு

0

ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுலாகும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே கொத்து, ஃப்ரைட் ரைஸ், பால் தேநீர் மற்றும் உணவுப்பொதி என்பவற்றின் விலைகளை 10 ரூபாயினால் அதிகரிக்க உணவக உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.