கொரோனாவால் இலங்கையில் 11ஆவது மரணம் பதிவு

0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

குவைத்திலிருந்து நாடு திரும்பி ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 633 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 822 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது.