கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்ய அனுமதி?

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை மாலைதீவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய இலங்கை அரசு அனுமதி வழங்காத நிலையில், மக்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக நீதி அமைச்சர் அலி சப்ரிக்கும் பலத்த அழுத்தங்கள் வழங்கப்படுவதால் அவர் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய முற்பட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் உடல்கள் எரிக்கப்படுவதால் அதிகளவு முஸ்லிம் மக்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படாமல் இருக்கின்றனர். எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாலைதீவு அரசுடன் இராஜாங்க மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.