கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு – இன்று மட்டும் மூவர்

0

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு வாழைத்தோட்டம் மற்றும் கொம்பனித்தெரு பகுதிகளைச் சேர்ந்த 19 மற்றும் 65 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக ஜா எலவைச் சேர்ந்த 41 வயதுடைய ஆணொருவர் ,ஐ டி எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தா நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.