கொரோனாவால் மேலும் 63 உயிரிழப்புகள் பதிவு – 2 இலட்சத்து 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 63  மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மே மாதம் 23ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் 12 மரணங்களும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 11ஆம் திகதி வரையில் 51 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 136 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 354 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 21 ஆயிரத்து 277 ஆக பதிவாகியுள்ளது.

அவர்களில் ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 516 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தொற்றுக்கு உள்ளான 32 ஆயிரத்து 688 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.