கொரோனாவினால் உயிரிழந்த 45 சடலங்கள் மட்டக்களப்பில் இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ளன

0

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 45 பேரின் சடலங்கள் இதுவரை மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் வைத்திய தொழிநுற்ப சேவையின் பணிப்பாளர் அன்வர் ஹம்தானி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் 27 ஆண்கள் மற்றும் 18 பெண்களின் சடலங்களே இதுவரை இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடக்கம் செய்யப்படுவதற்கான கோரிக்கை முன்வைக்கபட்ட நபர்களுடைய சடலங்கள் அனைத்தும் தற்போதைய நிலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு ஏற்ற இடங்களை அடையாளம் கண்டு அறிவிக்குமாறு அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் வைத்திய தொழில்நுற்ப சேவையின் பணிப்பாளர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.