கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக பிரதமர் கூறவில்லை?

0

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரினை மேற்கோள்காட்டி த லீடர் இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் ஒருவரின் சடலத்தினை அடக்கம் செய்வது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதமர் அலுவலகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரி இவ்வாறு பதிலளித்துள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, ”அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்” என்றே பிரதமர் பதிலளித்ததாக அவர் கூறியுள்ளார்.

அதைவிடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இடமளிப்பதாக பிரதமர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கருத்து வெளியிடவில்லை என பிரதமர் அலுவலகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரி பதிலளித்ததாக த லீடர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் வெளியிட்ட கருத்தை அடுத்து, அரசத் தலைவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தமது வரவேற்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த பின்னணியிலேயே, பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.