கொரோனாவினால் நின்றுபோன பிரபலங்களின் திருமணங்கள்!

0

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர்களின் திருமணங்கள் தள்ளிப்போயுள்ளன.

அவுஸ்ரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அடம் ஷம்பா, பெண்கள் அணி இடது கை சுழற்பந்துவீச்சாளர் ஜெஸ் ஜோனஸ்சன், ஜேக்சன் பேர்ட், மிட்செல் ஸ்வெப்சன், அண்ட்ரிவ் டை, டி’ஆர்கி ஷார்ட், கேட்லின் பிரைய்ட், மெக்டேர்மோட் ஆகியோருக்கு எப்ரல் மற்றும் மே மாதங்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இப்போது கொரோனா அச்சுறுத்தலால் இவை பிற்போடப்பட்டுள்ளன. இதேபோன்று நிச்சயதார்த்தம் நிறைவுற்ற மக்ஸ்வெல், கேட் கம்மின்ஸ் திருமண திகதிக்காக நீண்டநா கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, சகல கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமையால், அவர்கள் ஊதிய இழப்பையும் சந்திக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.