கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு!

0

கொரோனா வைரஸினால் மேலும் 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக இலங்கையில் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடக சந்திப்பொன்று தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இவர்களுள் 13 வயதுடைய சிறுமி ஒருவரும் 50இ 37 வயதுகளையுடைய இரு ஆண்களும் அடங்குகின்றனர்.