கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி சடங்குகள் குறித்த அறிக்கை விரைவில்

0

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவின் அறிக்கை விரைவில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிபுணர் குழு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான விஞ்ஞான ரீதியிலான காரணங்களை பரிசீலித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வர்த்தமானி செய்யப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி, கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் உடல்கள் இறந்த 24 மணி நேரத்திற்குள் தகனம் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் பேசிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, கொரோனா தொற்றினால் உயிரிழந்த அனைவரையும் தகனம் செய்வதற்கான முடிவை நிபுணர்க குழு மதிப்பாய்வு செய்யும் என கூறினார்.

மேலும் தகனம் செய்வதற்கு அனுமதிக்கும் முடிவு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறிப்பிட்டிருந்தார்.