கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த முழுமையான விபரம்!

0

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாட்டில் நேற்று(வியாழக்கிழமை) மாத்திரம் 873 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 866 பேரும், கைதிகள் 7 பேருமே நேற்றைய தினம் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், நாட்டில் அண்மைய நாட்களில் ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாகவும் நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின்  மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 62 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276 ஆகவும் அதிகரித்துள்ளது.

பேலியகொட பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கடுமையான நியூமோனியாவினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், அத்துருகிரிய பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஆணொருவர் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம  வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், அவருக்கு கொவிட் நியுமோனியா அதிகரித்தமை காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 769 பேர் குணமடைந்த நிலையில் நேற்று  வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நாட்டின் 66 சிகிச்சை நிலையங்களில் 7ஆயிரத்து 804 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 792 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.