கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு!

0

இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே சுகாதாரை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவிலிருந்து அழைத்து வரப்படும் யாத்திரிகர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்நாட்டு சுற்றுலா பயணங்களை இன்று முதல் நிறுத்துமாறு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.