கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்யும் முறை குறித்த வர்த்தமானி வெளியானது!

0

கொரோனா வைரஸினால் மரணிப்பவரின் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டிய முறை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளுக்கு அமைய தகனம் செய்யப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.