கொரோனாவினால் முடக்கப்பட்ட 2 பகுதிகள் விடுவிப்பு!

0

கொரோனா தொற்று பரவலையடுத்து முடக்கப்பட்டிருந்த கொழும்பு 12, பண்டாரநாயக்க  மாவத்தை மற்றும் ஜா-எல சுதுவெல்ல ஆகிய பகுதிகள் முடக்க நிலையிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நாட்டில் முடக்கப்பட்ட பகுதிகள் எவையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனிமைப்படுதலை நிறைவுசெய்திருந்தாலும் மேலும் சில தினங்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.