கொரோனாவினால் மூடப்பட்ட மருதானை இமாமுல் அருஸ் மாவத்தை மீண்டும் திறக்கப்பட்டது!

0

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த மருதானை இமாமுல் அருஸ் மாவத்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் மூன்றாவது மரணம் மருதானையில் பதிவாகியமையைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதியிலிருந்து இன்று வரை இமாமுல் அருஸ் மாவத்தை மூடப்பட்டிருந்தது.

இமாமுல் அரூஸ் மாவத்தை தொடர்மாடிக் குடியிருப்பைச் சேர்ந்த 302 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு புனானை கண்காணிப்பு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 17 ஆம் திகதி அவர்களின் தனிமைப்படுத்தல் காலப்பகுதி நிறைவுற்று வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

அது முதல் 14 நாட்களுக்கு அவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டனர்.

இன்றுடன் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டு 14 நாட்கள் நிறைவுற்ற நிலையில், குறித்த பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.