கொரோனாவினை கட்டுப்படுத்த தன்னார்வப் படையணி!

0

கொரோனா பரவலினை கட்டுப்படுத்தும் நோக்கில் தன்னார்வப் படையணி ஒன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய கொரோனா தடுப்பு பணிகளில் நேரடியாக ஈடுபடாத சுகாதார ஊழியர்களை குறித்த பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தும் நோக்கத்துடன் தன்னார்வப் படையணி ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து இதற்காக பதிவு செய்துக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.