கொரோனாவின் தாண்டவம் குறைந்து வருகிறது

0

நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொடர்பிலான புதிய அறிக்கையின் பிரகாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, குறைவடைந்துள்ளது.

அந்த ஐந்து மாவட்டங்களையும் தவிர, ஏனைய மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100ஐ விடவும் குறைவாகும்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணக்கை 67 ஆகும். காலி மாவட்டத்தில் பத்தேகமையில் 51 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் (11) மட்டும், 13 ஆயிரம் பேருக்கு மேல், பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.