கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் இருவர் இன்று (வியாழக்கிழமை) குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் குணமடைந்தவர்களின் தொகை 65 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 238 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதுடன், அதில் 166 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன், ஏழு பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.