கொரோனாவில் வைரஸ் பாதிப்பில் இருந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் (Justin Trudeau) மனைவி சோபி குணமடைந்துள்ளார்.
லண்டன் சென்று விட்டு திரும்பிய சோபிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கடந்த 12ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தவ் சம்பவத்துக்குப் பின்னர் ஜஸ்டின் ட்ருடோ தன்னை தனிமைபடுத்தி பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளப் பக்கத்தில் சோபி வெளியிட்ட பதிவுகளில், தாம் குணமடைந்து விட்டதாக மருத்துவரும், ஒட்டாவா பொது சுகாதார துறையும் தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
தற்போது தனது உடல்நிலை மிகவும் நன்றாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள சோபி, நோயிலிருந்து குணமாக பிரார்த்தித்த மற்றும் வாழ்த்தியோருக்கு இதயபூர்வமாக நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.