கொரோனாவிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

0

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினர் குணமடைந்துள்ளனர்.

கடற்படை ஊடகப்பேச்சாளர் இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய இதுவரையில் 848 கடற்படையினர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் மொத்தமாக 904 கடற்படையினர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 56 தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.