கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

0

நாட்டில் நிலவும் அதிக மழையுடனான வானிலையால் 08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 800 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் இவர்களில் மூன்றில் ஒரு வீதமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 7 ஆயிரத்து 873 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.