கொரோனாவுடன் மாயமான தாயை தேடி தீவிர சோதனை – குழந்தை கண்டுபிடிப்பு

0

ஐ.டி.எச் வைத்தியசாலையிலிருந்து தனது இரண்டரை வயதான குழந்தையுடன், தாயொருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பிலான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த தாய், தனது குழந்தையுடன் நேற்றிரவு 9.10 அளவில் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டிருந்த நிலையிலேயே, அவர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த குழந்தை எஹலியகொட – யாய வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற தாய் மற்றும் குழந்தை ஆகியோர் பஸ் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையிலேயே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

தலைமறைவாகியுள்ள தாயை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.