கொரோனாவை கட்டுப்படுத்த அதிகளவில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – சி.யமுனாநந்தா

0

நாட்டில்  கொரோனா நோய் பரம்பலை கட்டுப்படுத்த  அதிகளவில் PCR பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும்  கொரோனா தொற்று நிலைமை தொடர்பில்  கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு  குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று  ஒரு பூகோளபரம்பல் தொற்றுநோயாகும் இதன் தொற்று வீதம் சாதாரண தொற்று நோய்களை விட மிகவும் அதிகமாகவுள்ளது இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்த நோயாளிகளை அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தல் அவசியமானது இதற்கு PCR  பரிசோதனை உதவுகின்றது

நோய் தொற்றினை  கண்டறியும் PCR பரிசோதனை வீதத்தை அதிகரித்தால்  மாத்திரமே நாட்டில் கொரோணா  நோயினை கட்டுப்படுத்த முடியும் இதற்கு நோய் பரவுகின்ற திசையை கண்டறிந்து PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் கொரோணா  தொற்று எண்ணிக்கை 10 மடங்காக அதிகரிக்கும் போது PCR பரிசோதனைகளினை  இன்னும்  இரு மடங்காக அதிகரிக்க வேண்டும்.

அந்த வகையில் இலங்கையில் PCR ஆய்வுகூடங்கள் மேலும் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும் PCR முடிவுகளே தனிமைப்படுத்தல்களை ஏற்படுத்த, சமூகமுடக்கத்தினை ஏற்படுத்த உதவுகின்றது. அதேபோல PCR முடிவுகளின் அடிப்படையிலேயே நோயாளர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்னும் 20 வருடங்களுக்கு இந்த கொரோணா நோய்க்கிருமி எமது சமூகத்தில் காணப்படும் எனவே நாங்கள் பயன்படுத்தும் முககவசங்களை சாதாரண குப்பைகளில் போடுதல் அல்லது தெருக்களில் வீசுதல்தவறானது ஏனெனில் யாழில் மக்கள் தாங்கள் பயன்படுத்திய முககவசங்களினை பசுமாடுகளிற்கோ அல்லது  ஏனையகழிவுகளுடன் கொட்டுவதனை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

இந்த முககவசங்களிலிருந்து கிருமி மிருகங்களிற்கு கடத்தப்படலாம் எனவே கொரோணா நோயாளிகள் அல்லது பொதுமக்கள் பாவிக்கின்ற முககவசங்களை பொது இடங்களில்,சாதாரண குப்பைகளோடு போடுவது தவிர்க்கப்பட வேண்டியதாகும் இது சாதாரண மிருகங்களின் மூலம் சமூகத்தில் நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இந்த விடயங்களை மக்கள் கருத்தில் கொள்ளவேண்டும்” என பணிப்பாளர் தெரிவித்தார்