கொரோனா அச்சத்தில் தற்கொலை செய்துகொள்வது கவலைக்குரியது!

0

கொரோனா தொற்று குறித்த அச்சமடைந்துள்ள சிலர் தற்கொலை செய்து கொள்வது கவலைக்குரிய விடயமாகும் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

எவ்வித அறிகுறிகளும் அற்ற தொற்றாளர்களில் 80 சதவீதமானோர் குணமடைந்துள்ளதைப் போன்று அறிகுறிகளுடன் இனங்காணப்பட்ட பலரும் முழுமையாக குணமடைந்துள்ளார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

உடல் நலக்குறைவு அல்லது ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருந்துவிடக் கூடாது. உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும்.

கொரோனா தொற்று தொடர்பான அச்சத்தில் சிலர் தற்கொலை செய்து கொள்வது கவலைக்குரிய விடயமாகும். இது செய்யக் கூடாததும் இடம்பெறக்கூடக் கூடாததுமாகும். அவ்வாறு அச்சமடைய வேண்டிய தேவை கிடையாது.