கொரோனா அச்சம் காரணமாக யாழில் 8 பேர் அனுமதி!

0

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணம் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸின் அச்சம் இதுவரை நீங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.