கொரோனா அச்சம் – பொலிஸ் அதிகாரிகள் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

0

ஹிங்குராங்கொடை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

கந்தகாடு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த பொலிஸ் நிலையத்திற்கு வந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஹிங்குராங்கொடை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த குறித்த 13 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.