கொரோனா அச்சம் – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி

0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

லண்டனில் இருந்து மட்டக்களப்பிற்கு வருகை தந்து தங்கியிருந்தவரே இவ்வாறு சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் மட்டக்களப்பு நகரில் தங்கியிருந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேநேரம் நேற்று முன்தினம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த நபர் இன்று சிகிச்சையின் பின்னர் வீடுசெல்ல அனுமதிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.