கொரோனா அச்சம் – வவுனியாவிலிருந்து ஒருவர் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றம்!

0

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணமாக ஒருவர் வவுனியாவிருந்து யாழ்.வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்றிரவு(செவ்வாய்கிழமை) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரே இவ்வாறு யாழ்.வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த நபர் கொரோனா குறித்த விசேட பரிசோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 43 பேர், விசேட வைத்தியக்குழுவின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் சுமார் 220 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்கள் 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு நிலையங்களில் 2 ஆயிரத்து 258 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.