கொரோனா அச்சுறுத்தல் – அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

0

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமையாற்றும் பணியாளர்களின் விபரங்களை ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதானிகளிடம், பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதற்கமைய, தமது நிறுவனப் பணியாளர்களின் சரியான விபரங்களை, எதிர்வரும் மூன்று நாட்களுக்குள், புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பது குறித்து விசேட கவனஞ் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், அவசர தேவைகளைக் கருத்திற் கொண்டு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.