கொரோனா அச்சுறுத்தல் : அரச நிறுவனங்களின் சேவைகள் இடைநிறுத்தம்

0

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரச நிறுவனங்கள் பலவற்றின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

  • இலங்கை கோள் மண்டலம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
  • இதனிடையே, பரீட்சைகள் திணைக்களத்தினால் 2020 மார்ச் மாதத்தில் நடத்தப்படவிருந்த அனைத்து பரீட்சைகளம் திகதி குறிப்பிடப்படாமல் பிற்போடப்பட்டுள்ளது.
  • 2020 கல்விப் பொதுத்தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
  • ஒருநாள் சேவையின் கீழ் பரீட்சை பெறுபேறுகளை பெறும் வேலைத்திட்டம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
  • சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
  • ஒருநாள் சேவையூடாக தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
  • அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் தேசிய கண் வைத்தியசாலைக்கு வருகை தருமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.