கொரோனா அச்சுறுத்தல் – இன்று இரவு முதல் முடக்கப்படுகின்றது மருதமுனை!

0

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று(வியாழக்கிழமை) இரவு 10 மணி முதல் அம்பாறை மாவட்டத்தின்  மருதமுனை பகுதி முடக்கப்படவுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம் ரக்கீப் தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக்கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று  இரவு முதல் மருதமுனை பிரதேசத்திற்கு வெளியில் இருந்து பொதுமக்கள் உட்பிரவேசிப்பதும், மருதமுனையில் இருந்து வெளியேறுவதும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.